Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ 2 - நல்லா வச்சாங்கப்பா பேரு

கோ 2 - நல்லா வச்சாங்கப்பா பேரு
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (20:28 IST)
பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடித்துள்ள கோ 2 முடிந்துவிட்டது. படத்தை செப்டம்பர் 17 வெளியிடுவதாக திட்டம்.
 

 
ஆனால், செப்டம்பர் மாதம் முழுக்க பல பெரிய படங்கள் அணிவகுக்கின்றன. செப்டம்பர் 4 -ஆம் தேதி விஷாலின் பாயும் புலி, அசோன் செல்வனின் சவாலே சமாளி உள்பட 5 படங்கள் வெளியாகின்றன. செப்டம்பர் 11 ஆர்யாவின் யட்சன், பா.விஜய்யின் ஸ்ட்ராபெரி என பல படங்கள். செப்டம்பர் 17 சொல்லவே வேண்டாம். ரஜினி முருகன், கவுண்டமணியின் 49 ஓ, நயன்தாராவின் மாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா என பாடங்கள் அணி வகுக்கின்றன.
 
இதன் காரணமாக கோ 2 படத்தின் வெளியீட்டை அக்டோபர் 17 -க்கு தள்ளி வைத்தனர். அன்றும் வேறு படங்கள் அணிவகுக்கும் போலுள்ளது. முக்கியமாக அக்டோபர் 21 விக்ரம் படம் வெளியாகிறது. 
 
கூட்டிக் கழித்துப் பார்த்தால் கோ 2 இன்னும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil