Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி

சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி
, புதன், 16 செப்டம்பர் 2015 (17:15 IST)
படத்தின் கதையைதான் ரகசியமாக வைத்திருப்பார்கள். கிருமி பட இயக்குனர், தனது படம் திரையிட தேர்வாகியிருக்கும் சர்வதேச திரைப்பட விழா எது என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.


 


மதயானைக்கூட்டம் படத்தில் நடித்த கதிர், ரேஷ்மி மேனன் இணைந்து நடித்திருக்கும் படம், கிருமி. அருண் சரண் படத்தை இயக்கியிருக்கிறார். வரும் 24 -ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

கிருமி சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் திரையிட தேர்வாகியுள்ளது என்றார் இயக்குனர் அருண் சரண். எந்த திரைப்படவிழா என்றால் பதிலில்லை.

இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் இந்த சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதில்லை. கிருமிதான் முதல்முறை. அது எந்த திரைப்படவிழா என்பதை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவேன் என்றார்.

அடக்கடவுளே... இதுக்கெல்லாமா சஸ்பென்ஸ் வைப்பாங்க.
 

Share this Story:

Follow Webdunia tamil