Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிடாரி டீஸர் வெளியானது - வீடியோ இணைப்பு

கிடாரி டீஸர் வெளியானது - வீடியோ இணைப்பு

கிடாரி டீஸர் வெளியானது - வீடியோ இணைப்பு
, வியாழன், 28 ஜூலை 2016 (11:26 IST)
சசிகுமார் தயாரித்து நடித்திருக்கும் கிடாரி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.


 
 
சசிகுமார் சமீபத்தில் தயாரித்த, நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. கோடிகளில் சம்பளம் வாங்கும்  சசிகுமாருக்கு அந்த கோடிகளை தருவதற்கான எந்த நியாயத்தையும் சமீபகால படங்கள் செய்யவில்லை. சசிகுமாரின் சந்தை நிலவரத்தை தக்க வைத்துக் கொள்ள இருக்கும் கடைசி அஸ்திரம் இந்த கிடாரி.
 
அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கும் இந்த கிராமத்து ஆக்ஷன் கதையை அதிகம் செலவு  வைக்காமல் தயாரித்துள்ளார் சசிகுமார். சில லட்சங்களில் நடிகர்களின் சம்பளம் அடங்கி விடுவதான ஸ்டார் காஸ்ட். நாயகி நிகிலா விமல். சசிகுமாருடன் நடித்தாலே போதும் சம்பளம் வேண்டாம் என்று நினைக்கும்  நிலையில் இருப்பவர். அரசியல், ஐடி என்று திசைமாறிப்போன நெப்போலியனும் படத்தில் நடித்துள்ளார்.
 
கிடாரியை போட்டியில்லாத காலமாகப் பார்த்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

500 மில்லியன் டாலர்களை நெருங்கும் ஃபைன்டிங் டோரி