Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஷ்புவின் ஹலோ நான் பேய் பேசுகிறேன்

குஷ்புவின் ஹலோ நான் பேய் பேசுகிறேன்
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (11:22 IST)
அரண்மனை படத்தின் வெற்றி குஷ்பு - சுந்தர் சி. தம்பதியை பேய்கள் குறித்து அதிகம் யோசிக்க வைத்துள்ளது. உடனடியாக அரண்மனை 2 படத்தை தொடங்கி ஏறக்குறைய முடித்துவிட்டனர். அடுத்து, ஹலோ நான் பேய் பேசுகிறேன் என்ற படத்தை தொடங்கியுள்ளனர்.


 
 
அரண்மனை, அரண்மனை 2 போன்று இதுவும் ஒரு பேய் படம்தான். சுந்தர் சி., குஷ்பு இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடிக்கின்றனர்.
 
காக்கா முட்டையில் யதார்த்தமான நடிப்பில் வித்தியாசம் காட்டிய ஐஸ்வர்யா, இந்தப் படத்தில் சாவுக்கூத்துக்கு ஆடியிருக்கிறார். செமையான பேயாட்டமாம் அந்த ஆட்டம். பேய்க்கு பயப்படாதவர்களும் ஐஸ்வர்யாவின் பேயாட்டத்துக்கு கலங்கிப் போவார்கள் என்கிறார்கள்.
 
அடுத்த வருடம் இந்தப் பேய் படம் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil