Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை கேஜிஎஃப் 2 ட்ரெய்லர்..! – தமிழில் வெளியிடும் ஸ்டார் நடிகர்?

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (13:27 IST)
இன்று மாலை கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில் ஒவ்வொரு மொழியிலும் ட்ரெய்லரை வெளியிடும் நடிகர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் டூஃபான் என்ற முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் இன்று மாலை ட்ரெய்லர் வெளியாகிறது.

இந்த படத்தின் தமிழ் மொழி ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிடுகிறார். தெலுங்கு மொழி ட்ரெய்லரை ராம் சரணும், மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜும் வெளியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அடுத்த கட்டுரையில்
Show comments