Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி… 10 ஆண்டுகளை நிறைவு செய்த மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (10:00 IST)
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அதன் பின்னர் அவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து முன்னணி நடிகையானார்.

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது.

இந்நிலையில் சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ் அது குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியான ஒன்று. என் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  என்னுடைய குருவான ப்ரியதர்ஷனுக்கும் நன்றி. அவர்தான் சினிமாவில் என் தொடக்கப்புள்ளிக்கான காரணம். என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments