Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வியாழன், 12 ஜூன் 2025 (07:49 IST)
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ன சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. சில மாதங்களுக்கு முன்னர் அவர் நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் ரிலீஸாகி கவனத்தைப் பெற்றது. பாலிவுட்டில் அவர் அறிமுகமாகும் பேபி ஜான் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இதற்கிடையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்ற நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments