சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

Siva
செவ்வாய், 27 மே 2025 (18:38 IST)
திருமணத்திற்கு பின்னரும் நயன்தாரா பிசியான நடிகையாக இருக்கிறார் என்பதும், சமீபத்தில் கூட அவர் சிரஞ்சீவி படத்தில் நடிப்பதற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதேபோல், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வருகிறார்.
 
அந்த வகையில், சூர்யா - வெங்கி அட்லுரி  இணையும் படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அவர் பிரபலம் என்பதால், அவரை நடிக்க வைக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், கீர்த்தி சுரேஷ், விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்காக மொத்த கால்ஷீட் கொடுத்து விட்டதால், "நீங்கள் கேட்கும் தேதி என்னிடம் இல்லை" என்று கூறி சூர்யா படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து தான்  மமிதா பாஜு சூர்யாவின் 46வது படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா படத்தை விட, விஜய் தேவரகொண்டா படத்திற்கு கீர்த்தி சுரேஷ் முக்கியத்துவம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments