Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (17:32 IST)
முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
 
விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் நாயகியாக அறிமுகமானார். ‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றி பெற்றதையடுத்து விஜய்யின் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார்.
 
தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தனுசுடன் ‘தொடரி’ படத்திலும், பாபி சிம்ஹாவுடன் ‘பாம்புசட்டை’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில்  சூர்யாவுடன் நடிக்க கீர்த்தி சுரேசுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 
 
தற்போது ‘எஸ்-3’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து விக்னேஷ் சிவன் படத்திலும், தொடர்ந்து அருண்குமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு கீர்த்தி சுரேஸ்- சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமலாபாலுக்கு ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. ‘தங்கலான்’ படத்திற்கு வழிவிட்டதால் ரஞ்சித் மகிழ்ச்சி..!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments