Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (13:05 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் காலத்தின்போது நடந்து கொள்ளவேண்டியது எவ்விதம் என்பது குறித்தும் பல திரையுலக பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்
 
ஏற்கனவே நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ் உள்பட பலர் இது குறித்த வீடியோக்களை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: 
 
கொரோனா  வைரஸிலிருந்து முழுவதும் நம்மை பாதுகாக்க நாமே சில அடிப்படைத் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். அப்படியே சென்றாலும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். அவசியமான நேரத்தில் டபுள்மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அரசு கூறும் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுங்கள்
 
நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டேன். நீங்களும் இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள். இதைத்தான் நம் தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகின்றார்கள். இதை நீங்கள் பின்பற்றி நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்ற வேண்டியது உங்களது பொறுப்பு.
 
கொரோனா நோய் வெல்வோம், மக்களை காப்பாற்றுகோம். கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம், நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்’ இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments