Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கவின்: ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:22 IST)
நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான கவின், திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சமீபத்தில் இந்திய அரசு பப்ஜி உள்பட 118 செயலிகளை தடை செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பப்ஜி தடையால் பல இளைஞர்களின் வாழ்வு மீட்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நானும் பப்ஜி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் இனிமேல் பப்ஜி விளையாட்டு விளையாட மாட்டேன் என்றும் நடிகர் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிய போது வெளியிட்ட அறிவிப்பின் பாணியிலேயே கவினும் தனது பப்ஜி விளையாட்டு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சமாகும். கவினின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கவின் நடிக்க இருப்பதாகவும், அதுமட்டுமின்றி நாயகனாக இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments