’கலகலப்பு 3’ படத்தில் கவின் நடிக்கிறாரா? சுந்தர் சி விளக்கம்..!

Siva
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (15:28 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் கலகலப்பு திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் கவின் நாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில் இந்த செய்தியை சுந்தர் சி தரப்பு மறுத்துள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு மற்றும் கலகலப்பு 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றி பெற்ற நிலையில் விரைவில் கலகலப்பு 3 உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான கதையை சுந்தர் சி எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கலகலப்பு 3 திரைப்படத்தில் கவின் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து சுந்தர் சி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

கலகலப்பு 3 படத்திற்கான நட்சத்திரங்கள் தேர்வு இன்னும் ஆரம்பமாகவில்லை என்றும் இந்த படத்தில் கவின் நடிப்பதாக  ஊடகங்களில் வெளியாகி கொண்டிருக்கும் செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் கவினிடம் நான் எந்த பேச்சு வார்த்தையில் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கலகலப்பு 3 படத்தில் கவின் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments