இந்த 3 சர்ப்ரைஸ்களை வெளியே சொல்லாதீர்கள்: ரசிகர்களுக்கு ‘ஸ்டார்’ இயக்குநர் வேண்டுகோள்..!

Siva
வியாழன், 9 மே 2024 (19:33 IST)
கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் இளன், நாளை ‘ஸ்டார்’ படம் பார்க்கும் ரசிகர்கள் இதில் உள்ள மூன்று சர்ப்ரைஸ்களை வெளியே சொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் ‘ஸ்டார்’ திரைப்படம் நாளை முதல் வெளியாக இருப்பதை எடுத்து இந்த படத்தை எனது தந்தை பாண்டியன் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் 
 
மேலும் ரசிகர்களாகிய உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன், நீங்கள் நாளை இந்த படத்தை பார்த்தவுடன் இந்த படத்தில் உள்ள மூன்று முக்கியமான ‘ஸ்டார்’ தயவு செய்து வெளியே சொல்ல வேண்டாம்
 
என்னுள் இருக்கும் கலைஞன் எல்லோரும் அந்த சர்ப்ரைஸை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தில் மூன்று சர்ப்ரைஸ்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
Edited By Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments