Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூர்யா, சிவகார்த்திகேயனுடன் மோதல்?

Siva
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:02 IST)
கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் தீபாவளி அன்று வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவின் நடித்த ’ஸ்டார்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ‘பிளடி பெக்கர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் அல்லது நவம்பரில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ‘பிளடி பெக்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளதை அடுத்து கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யாவின் ’கங்குவா’ மற்றும் அஜித்தின் ’விடாமுயற்சி’ ஆகிய படங்களும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கவினின் ‘பிளடி பெக்கர்’ படமும் தீபாவளி பட்டியலில் இணைந்துள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments