Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தி - ஐந்து காட்சிகள் அமர்க்களமான ஓபனிங்

Webdunia
புதன், 22 அக்டோபர் 2014 (18:07 IST)
தெலுங்கில் ராம் சரண் தேஜா நடித்த நாயக், யவடு படங்களின் சாயலில் வெளிவந்துள்ளது கத்தி. படத்தின் கதை, திரைக்கதையில் தளர்ச்சி இருந்தாலும் தனது தேர்ச்சிமிக்க இயக்கத்தால் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் முருகதாஸ்.

vijay, actor, director, murugadoss, kaththi, first look photos, images, released
 
வில்லனால் குற்றுயிராக்கப்படும் விஜய்யின் இடத்தில் இன்னொரு விஜய் என்ட்ரியாகும் போது திரையரங்குகள் அதகளமாகின்றன. 
 
பண்டிகை தினம் என்பதால் ஐந்து காட்சிகள் நடத்த திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. லைகா பிரச்சனையும் முடிவுக்கு வந்ததால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கத்தி பட்டையை கிளப்புகிறது.
 
தமிழகத்தில் படம் வெளியான அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல். வெளிநாடுகளிலும் அப்படியே. துப்பாக்கி அளவுக்கு படம் வசூல் செய்யும் என்று விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேநேரம் இதுவரை வெளியான விஜய் படங்களில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த படமாக கத்தி இருக்கும் எனவும் தகவல்கள் வந்துள்ளன. வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் படம் வெளியானதே இதற்கு முக்கிய காரணம்.
 
படத்தின் முக்கிய கதை, தண்ணீரை திருடும் கார்ப்பரேட் கம்பெனிகள். படத்தில் விஜய்க்கு பன்ச் வசனங்கள் இல்லை, இறிமுகப் பாடல் காட்சியும் இல்லை. அட, அவரது அறிமுகம்கூட சாதாரணமாகதான் இருக்கிறது. ஆனாலும் திரையரங்கில் விசில் பறக்கதான் செய்கிறது.

கத்தி படத்தை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்

http://bit.ly/Kaththi-Tix

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments