Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திக்கு 1,000 பூஜைக்கு 1100 - ஸ்டார் வார் ஸ்டார்ட்

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2014 (10:19 IST)
கத்தி, பூஜை இரண்டும் தீபாவளிக்கு வெளியாவது முன்பே உறுதியாகிவிட்டது. இன்றைய தேதியில் வியாபாரம், மாஸ், ரசிகர்கள் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் விஜய்யின் போட்டியாளராக விஷாலை சொல்ல முடியாது. ஆனாலும் நடக்கிற விஷயங்களைப் பார்த்தால் ஆச்சரியமாகதான் இருக்கிறது.
கத்தி படம் இந்தியாவில் 1000 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 500 திரையரங்குகளிலும் வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேநேரம் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் வந்திருக்கிற செய்தி இது. பூஜை படம் இந்தியாவில்  - தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்த்து - 1100 திரையரங்குகளில் வெளியாகிறது. கத்தியைவிட 100 திரையரங்குகள் அதிகம்.
தமிழ்நாட்டில் கத்தி அதிகபட்சமாக 400 திரையரங்குகளிலும், பூஜை 350 திரையரங்குகளிலும் வெளியாகும் என்கிறார்கள். ஆந்திரா, கேரளாவைச் சேர்த்தால் மேலுமொரு 300 தேறும். மீதி..?
 
எப்படிப் பார்த்தாலும் இவர்களின் கணக்கு உதைக்குதே நாராயணா.

கேம் சேஞ்சர் படத்தைப் பற்றி பேச எனக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது… அஞ்சலி பதில்!

சலார் 2 படம் ட்ராப்பா?... புகைப்படம் மூலம் பதிலளித்த படக்குழு !

கேரளாவில் ரி ரிலீஸ் ஆகும் சூர்யா முருகதாஸின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

சென்சார் போர்ட் எதிர்ப்பால் தலைப்பு மாறும் ‘வடக்கன்’ படம்!

தனுஷின் ராயன் ஒதுங்கியதால் வருகிறதா விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்?

Show comments