Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களால தான் உங்க ரசிகர்கள் மோசமா ஆயிட்டாங்க: அஜித் மீது கஸ்தூரி குற்றச்சாட்டு

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (10:20 IST)
அஜீத் மற்றும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர்களால் தான் அஜித் ரசிகர்கள் இந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்கின்றனர் என்று நடிகை கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களாகவே நடிகை கஸ்தூரிக்கும் அஜீத் ரசிகர்களுக்கும் டுவிட்டரில் மோதல் இருந்து வந்தது தெரிந்ததே. கஸ்தூரி குறித்து ஆபாசமான கருத்துக்களை அஜித் ரசிகர்கள் பதிவு செய்து வருவதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்றும் அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை மிக மோசமாக விமர்சனம் செய்து டுவிட் செய்துள்ளனர். இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் அஜித் மற்றும் சுரேஷ் சந்திரா ஆகிய இருவரும் அஜித் ரசிகர்களை கண்டிக்காமல் மௌனத்துடன் இருப்பதால்தான் அஜித் ரசிகர்கள் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உடனடியாக அஜித் மற்றும் சுரேஷ் சந்திரா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் இத்தகையவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஸ்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
மேலும் தன்னை பற்றி ஆபாசமாக பதிவு செய்த ட்வீட்டுக்களையும் அவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்தூரியின் வேண்டுகோளை ஏற்று அஜித் இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

’இந்தியன் 2’ படத்துடன் ‘இந்தியன் 3’ டிரைலர்.. வேற லெவலில் யோசித்த ஷங்கர்..!

பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments