Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து விலகும் கரு.பழனியப்பன்: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (16:43 IST)
கடந்த நான்கு ஆண்டுகளாக ஜீ தமிழ் சேனலில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகரும் இயக்ககுனருமான கரு பழனியப்பன், அந்நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
 
சன் டிவியில் நடத்தப்பட்ட அரட்டை அரங்கம், விஜய் டிவியில் நடத்தப்பட்டு வரும் நீயா நானா போன்ற நிகழ்ச்சி தான் ஜீ தமிழ் சேனல் நடத்தப்பட்டு வந்த தமிழா தமிழா என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட டாப்பிக்கை எடுத்துக் கொண்டு மக்கள் பேசுவதும் அந்த நிகழ்ச்சியை அந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கியும் வந்தார். மேலும் அவரது பேச்சில் பெரும்பாலும் திராவிட அரசியல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கரு பழனியப்பன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ஜீ தமிழ் உடனான நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூகநீதி சுயமரியாதை திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே நல்லது என்றும் அவர் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments