Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போங்கடா நீங்களும் ..உங்க ஒழுக்கமும் .. உங்க இந்தியும்: கரு.பழனியப்பன்

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (09:45 IST)
கடந்த இரண்டு நாட்களாக ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பாக யுவன் சங்கர் ராஜா இதுகுறித்து அணிந்து டி-ஷர்ட் சமூக வலைதள ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த டிசர்ட் ஹேஷ்டேக்கிற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் பெரும் ஆதரவு தெரிவித்தது என்பதும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒழுக்கமான தாய் தந்தையருக்குப் பிறந்த இந்துக்கள் யாரும் இந்தியை எதிர்க்க மாட்டார்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது 
 
இந்த செய்திக்கு கருத்து தெரிவித்த பிரபல இயக்குநர் கரு பழனியப்பன் தனது டுவிட்டரில் கூறியதாவது நான் இந்தியை எதிர்ப்பதாலேயே என் பெற்றோரின் ஒழுக்கம் பற்றி பேசுவீர்கள் எனில்... போங்கடா நீங்களும் ..உங்க ஒழுக்கமும் .. உங்க இந்தியும் ..! என்று தெரிவித்துள்ளார். கரு பழனியப்பனின் இந்த டுவீட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஆனால் உண்மையில் ஹெச் ராஜா இப்படி ஒரு கருத்தை தெரிவிக்கவே இல்லை என்றும் யாரோ சிலர் போட்டோஷாப்பில் எச்.ராஜாவின் புகைப்படத்தை போட்டு தெரிவித்திருக்கும் கருத்துக்கு கரு பழனியப்பன் தேவையில்லாமல் பதில் சொல்லி இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

தனுஷுக்காகவே பிரத்யேகமான ஒரு கதையை எழுதி வருகிறேன்… லப்பர் பந்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!

மீண்டும் முயற்சிக்கிறோம்… விவகாரத்து முடிவைக் கைவிட்ட சாய்னா நேஹ்வால்!

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹெச் ராஜா… ’கந்தன் மலை’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!

வெற்றியையும் தோல்வியையும் பார்த்துள்ளேன்: 33 வருட சினிமா பயணம் குறித்து அஜித் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments