Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைப் பாராட்டுகளில் குதூகலிக்காதீர்கள்… சீனு ராமசாமிக்கு கரு பழனியப்பன் கடிதம்!

vinoth
வெள்ளி, 22 நவம்பர் 2024 (08:22 IST)
புதுமுக நடிகர் ஏகன் மற்றும் பலர் நடித்த ‘கோழிப்பன்னை செல்லதுரை’ என்ற படத்தை சீனு ராமசாமி இயக்கினார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகி தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து தற்போது ஓடிடியில் வெளியாகி சிறிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்போது ஓடிடியில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. இயக்குனர் சீனு ராமசாமியைப் பாராட்டி பலரும் முகநூல் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். அதை தன்னுடைய பக்கத்தில் அவர் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் கரு பழனியப்பன் கோழிப்பண்ணை செல்லதுரை குறித்து ஒரு நீண்ட கடிதத்தை சீனு ராமசாமிக்கு வெளியிட்டுள்ளார். அதில் “அண்ணே கோழிப்பண்ணை செல்லதுரை படம் பார்க்கவில்லையா? பார்த்துவிட்டு, நாலு வரி நல்லதா, முகநூலில் எழுதுங்க”என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்கள். கல்லூரிக் காலம் முதலே நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவோம் என்றாலும் இதுவரை கடிதம் எழுதிக் கொண்டதில்லை. இதுவே முதல் கடிதம். உங்களுடைய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம், அரங்க வெளியீட்டின் போது வெற்றி பெறவில்லை எனினும் ஓடிடி தளங்களில் வெளியான பின் பலரும் தங்களை பாராட்டுகின்றனர்.

அதை தாங்களும், தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்கின்றீர். நிற்க.உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பை காட்டுகிறது. அதை நமக்குரியது என நினைத்து ஏற்றுக் கொள்வது நம் பயணத்தை தடை செய்யக்கூடும். சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்ல வேண்டிய தூரமும் அடைய வேண்டிய உயரமும் அளப்பரியது. இந்தக் குழந்தைப் பாராட்டுகளில் குதூகலித்து தேங்கி நின்று விடாதீர்கள்.

“நடிப்பின் அசுரன் தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரிராஜா“ என்ற அடைமொழிகளோடு தாங்கள், கஸ்தூரிராஜா தங்களுக்கு எழுதிய பாராட்டை பகிர்ந்து இருந்தீர்கள்‌.நல்லது. மகிழ்ச்சி. தனக்கு அடுத்த தலைமுறை இயக்குநர்களின் மேல் கஸ்தூரிராஜா காட்டும் அன்பு அது. இதனால் என்ன நன்மை விளையும் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். முகம் தெரியாத ரசிகன் நம் படைப்பை ஆரவாரித்து கொண்டாடி வெற்றி பெற செய்ய வேண்டும். அது நிகழும் போது முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நம்மோடு கைகோர்த்து அடுத்த படம் செய்ய வருவார்கள், என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே.

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தர்மதுரை’ படங்களுக்கு மேலாக , சிறந்த படைப்பையும் மேலான வெற்றியையும் உங்களது அடுத்த படம் அடையட்டும்” இவ்வாறு கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா பங்கேற்பு.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

6 மாதத்தில் இவ்வளவுதான் முடிந்துள்ளதா?.. LIK ஷூட்டிங்கில் அட்ராசிட்டி பண்ணும் விக்னேஷ் சிவன்!

எக்குத்தப்பான கிளாமர் ட்ரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய திஷா பதானி!

ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்பட ஆல்பத்தை வெளியிட்ட ரெஜினா!

சஞ்சய் இயக்கும் படத்துக்கு இவர்தான் இசையா? வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments