Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் கருத்து மோதல்… காரணம் இந்த படம்தானா?

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (07:45 IST)
தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’’ ஜகமே தந்திரம்’’ படம் ஒடிடியில் ரிலீஸாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று  தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இப்படம் படக்குழுவினரின் கடின உழைப்பால் உருவாகியுள்ளது. இப்படம் உலகமெங்கும் 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது எனக்கூறி இப்படத்தின் டீசரையும் இன்று வெளியிட்டார்.

ஏற்கனவே இப்படம் ஓடிடியில் வெளிட நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக்சுப்புராஜ் விரும்பாத நிலையில், தயாரிப்பாளர் சஷிகாந்த் தானாகவே இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. இதனால் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சஷிகாந்துக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நெட்பிளிக்ஸ் நேற்று வெளியிட்ட நிலையில் அதை தனுஷ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிரக்கூட இல்லை. மேலும் அந்த டீசரைப் பற்றி எந்த ட்வீட்டும் அவர் வெளியிடவில்லை.

இது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு தனுஷ் மேல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். என்னதான் தயாரிப்பாளரோடு மன வருத்தம் இருந்தாலும் இத்தனை பேர் உழைப்பில் உருவான படத்துக்கு என்று மரியாதை செலுத்தி அதை ப்ரமோட் செய்யவேண்டாமா எனப் புலம்பி வருகிறாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments