Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா கார்த்திக் சுப்பராஜ்?

vinoth
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (08:13 IST)
நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து நேற்று முன்தினம்  உலகம் முழுவதும் ரிலீஸானது. அவர் நடித்த ‘துணிவு’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

ஆனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்தது. இதற்குக் காரணம் வழக்கமான மாஸ் மசாலா படமாக இல்லாமல் அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்ததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் தற்போது கார் பந்தயங்களில் பிஸியாக இருப்பதால் அவரின் அடுத்த படம் அக்டோபர் மாதத்தில்தான் தொடங்கவுள்ளது. இந்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் சில முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அந்த பட்டியலில் இப்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பெயரும் இணைந்துள்ளது. சமீபத்தில் அவர் அஜித்தை சந்தித்து ஒரு கதையை விவரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! அந்த பாலிவுட் படத்தை தடைசெய்ய வலுக்கும் குரல்கள்! - அப்படி என்ன இருக்கு அதுல?

‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments