Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் இறைவி

கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் இறைவி
, திங்கள், 6 அக்டோபர் 2014 (10:15 IST)
பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் கூப்பாராஜ் தனது புதிய படத்துக்கு இறைவி என்று பெயர் வைத்துள்ளார்.
 
ஜிகிர்தண்டா விமர்சனரீதியாக அதிக பாராட்டுகளையும், குறைந்த அளவு எதிர்ப்பையும் சம்பாதித்தது. படத்தின் வசூலைப் பொறுத்தவரை நகரங்களில் படம் ஓடிய அளவுக்கு கிராமப்புறங்களில் ஓடவில்லை. சில விநியோகஸ்தர்களுக்கு படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
எப்படி இருப்பினும் கார்த்திக் சுப்பாராஜின் அடுத்தப் படம் எது என்பதை அறியவும், அதனை பார்க்கவும் ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.
 
தனது முதல் படம் பீட்சாவை இயக்கிய சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டுக்கே அடுத்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு இறைவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் விவரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சந்தோஷ் நசாராயணன் இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil