Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச்

கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச்
, வெள்ளி, 7 நவம்பர் 2014 (12:39 IST)
நவம்பர் 10 விஜய், ஆர்யா படங்கள் தொடங்கப்படும் அன்று தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷனை தொடங்குகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ்.
 
அது என்ன ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்?
 
கார்த்திக் சுப்பாராஜ் குறும்படங்கள் எடுத்து அதிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். குறும்படங்களின் மீது காதலும், அதன் மார்க்கெட்டிங் குறித்தும் நன்கு அறிந்தவர். நல்ல குறும்படங்களை இந்த நிறுவனம் சார்பில் கொண்டு வருவதுதான் அவரது திட்டம். 
 
அத்தோடு தனது நிறுவனம் சார்பில் தானும் குறும் படங்கள் எடுத்து வெளியிட இருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரை சினிமாவில் செட்டிலாகும் ஒருவர் குறும்படங்களில் கவனம் செலுத்துவதில்லை. கார்த்திக் சுப்பாராஜ் விதிவிலக்கு.
 
அதற்காகவே இவருக்கு தரலாம் ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. அசத்துங்க பாஸ்.

Share this Story:

Follow Webdunia tamil