Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹே... கோதாவுக்கு நான் ரெடி

ஹே... கோதாவுக்கு நான் ரெடி
, சனி, 13 டிசம்பர் 2014 (13:14 IST)
அனேகன் படத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார் என்று மற்றவர்கள் கார்த்திக் பற்றி சொல்லும் போது பதட்டமாகதான் இருக்கிறது. ராவணன் படத்தின் போதும் அப்படிதான் சொன்னார்கள். இந்தமுறை கே.வி.ஆனந்த் ஏமாற்றமாட்டார் என நம்புவோம்.
 
ஆனால் விஷயம் அதுவல்ல. மகனுக்கு போட்டியாக கார்த்திக்கும் களம் இறங்க தீர்மானித்திருக்கிறார். முன்பெல்லாம் கார்த்திக்கை ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் கண்ணீரை துடைக்க பல டஜன் கர்ச்சீப்கள் வைத்திருப்பது வழக்கம். ரத்தக்கண்ணீர் வடித்தவர்களும் உண்டு. காலம் எதைஎதையோ மாற்றுகிறது. கார்த்திக் மட்டும் விதிவிலக்கா.
 
இப்போது கால்ஷீட் சொதப்புவதேயில்லையாம் கார்த்திக். முக்கியமான வேடம் என்றால் நாலு சீன் என்றாலும் அவர் நடிக்க தயாராம்.
 
குடும்பப் பிரச்சனையால் கார்த்திக்கின் சொத்து மதிப்பு தடாலடியாக இறங்கியதால்தான் இந்த திடீர் திருப்பம் என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் வரவேற்போம்.

Share this Story:

Follow Webdunia tamil