கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (06:53 IST)
’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இவர் இயக்கிய அடுத்த திரைப்படமான ’மாபியா’ என்ற திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 43 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தை தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் நிறைவடையவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments