Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: முக ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள்

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:15 IST)
வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: முக ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
 
இந்த நிலையில் முதல்வ பதவியேற்றவுடன் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து, கொரோனாவுகான அதிரடி நடவடிக்கைகளை காண தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் 
 
இந்த நிலையில் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு ரஜினிகாந்த் கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இன்று காலை ஏஆர் ரகுமான் கூட தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளியுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments