முக்கிய கலைஞருக்கு கொரோனா….சர்தார் படப்பிடிப்பு நிறுத்தம்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (15:36 IST)
சர்தார் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம்.

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராகிய கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படங்கள் எல்லாம் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார், முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் என நடித்து வருகிறார்.

இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சர்தார் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் இப்போது சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் இயக்குனர் மித்ரன். இந்த படப்பிடிப்பில் கார்த்தி விரைவில் கலந்துகொள்ள உள்ளார். சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களிலும், அவருடன் சிம்ரன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். விரைவில் அவர் தேறி வந்ததும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments