Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் கொம்பன் - ஜோடி கும்கி நாயகி...?

Webdunia
வெள்ளி, 30 மே 2014 (11:34 IST)
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் கார்த்தி ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக வைக்கிறார். தற்போது அவர் அட்டகத்தி ரஞ்சித்தின் இயக்கத்தில் மட்டுமே நடிக்கிறார்.
ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை முழுமையாக படித்த பிறகே ஷுட்டிங் கிளம்பினார் கார்த்தி. நடுவில் சில படங்கள் காலைவார மீண்டும் ரஞ்சித்தின் ஸ்கிரிப்ட் திருத்தி அமைக்கப்பட்டது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர் காளி. அந்த பெயரில் எடுக்கப்பட்ட படங்கள் மிகப்பெரிய விபத்துகளை சந்தித்த வரலாறு காரணமாக படத்தின் பெயரை கபாலி என்று மாற்றினர். தற்போது படப்பெயர் மெட்ராஸ் என மாற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமாக படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தப் படத்துக்குப் பிறகு குட்டிப்புலி முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படம் குறித்து முத்தையா அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம். படத்துக்கு கொம்பன் என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், குட்டிப்புலியின் நாயகி லட்சுமி மேனனையே கார்த்தி ஜோடியாக்கும் எண்ணம் உள்ளதாம் முத்தையாவுக்கு. 
 
விரைவில் படத்தின் பெயர் மற்றும் நாயகியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments