Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி: சர்தார் படத்தின் சஸ்பென்ஸ்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (11:56 IST)
நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் சர்தார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது கார்த்தி நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் கசிந்துள்ளது
 
கார்த்திக் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று போலீஸ் கேரக்டர் என்றும், இன்னொன்று விஞ்ஞானி கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. பிஎஸ் மித்ரன் இயக்கும் இந்தப் படம் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கிரைம் சப்ஜெக்ட் என்றும் இந்தப் படம் இதுவரை தமிழில் வெளிவராத கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது 
 
சிறுத்தை மற்றும் காஷ்மோரா ஆகிய திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கார்த்தி மீண்டும் மூன்றாவது முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் இன்னும் மூன்று பாடல்களை அவர் கம்போஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கும் இந்த படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments