கர்ணன கையோட கூட்டி வாருங்க! – கர்ணன் டீசர் குறித்து தனுஷ் ட்வீட்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (11:25 IST)
நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் பாடல்கள் ட்ரெண்டாகியுள்ள நிலையில் டீசர் வெளியீடு குறித்து நடிகர் தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். அசுரனுக்கு பிறகு மீண்டும் தென் தமிழகம் சார்ந்த கதையில் தனுஷ் நடிப்பதாலும், மாரி செல்வராஜின் இரண்டாவது படம் என்பதாலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கர்ணன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் கர்ணன் டீசர் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். அதனால் வரும் வாரத்தில் கர்ணன் டீசர் வெளியாகலாம் என்றும், திரைப்படம் மே மாத கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments