Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:24 IST)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments