Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அது வெறு வெளிச்சம் இல்லை… தரிசனம்”- காந்தாரா 2 ஃப்ர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (12:18 IST)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்கான ஆராய்ச்சிகளை ஒரு ஆண்டாக ரிஷப் ஷெட்டி செய்து வந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காந்தாரா 2 படத்தின் முதல் லுக் போஸ்டர் நவம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments