Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படத்தில் பிற மொழிகளில் ஏ ஐ மூலமாக சூர்யாவின் குரல்…!

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (14:40 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழில் சூர்யா டப்பிங் பேசியுள்ள நிலையில், மற்ற மொழிகளில் எல்லாம் டப்பிங் கலைஞர்கள் பேசி, அதை சூர்யாவின் குரல் போல ஏ ஐ தொழில்நுட்பத்தில் மாற்றியுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். சமீபத்தில் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனின் குரல் இதுபோல டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு தான் ஹீரோ.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. பிரபலம் கூறிய தகவல்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments