Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனராகும் கங்காரு தயாரிப்பாளர்

இயக்குனராகும் கங்காரு தயாரிப்பாளர்
, சனி, 2 மே 2015 (18:32 IST)
ஓவராக சத்தம் போடும் போதே யூகித்ததுதான். ஒன்று ஹீரோ இல்லை இயக்கம். கங்காரு படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் கம் நடிகராகியிருக்கிறார்.
 
கங்காரு என்ற சுமார் படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி அதனையொட்டி விடுத்த சவடால்கள் அனைவரும் அறிந்ததே. சாமி இயக்குகிற படம் சரியாக இருக்குமா என்று ஒரு கலாச்சார காவலாளி கொளுத்திப் போட்டதும், உலகத்துக்கே நாகரிகம் கற்றுத் தந்த பிரபாகரனின் தம்பிகள் நாங்கள் என்று ஒரு நகைச்சுவை வெடி வெடித்தார் சுரேஷ் காமாட்சி. இந்த வருடத்தின் ஆகச்சிறந்த காமெடி இதுதான்.


 

அவர் இப்போது இயக்குனர். ஆமாம். அனைத்துக்கும் ஆசைப்படு என்ற படத்தை இயக்கி நடிக்கவும் செய்கிறார். நல்லவேளையாக அவர் ஹீரோ கிடையாது. தனக்கு சரளமாக வரும் நகைச்சுவையை மையமாக வைத்தே இந்தப் படத்தை எடுக்கிறாராம்.
 
சுரேஷ் காமாட்சி சீரியஸ் காமெடியில்தான் கிங். அனைத்துக்கும் ஆசைப்படு பிளாக் க்யூமராக இருக்கவே அதிக வாய்ப்பு.

Share this Story:

Follow Webdunia tamil