Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில்கீஸ் பானு வாழ்க்கையை படமாக்க நான் தயார்… ஆனால்..?- ரசிகருக்கு கங்கனா பதில்!

vinoth
புதன், 10 ஜனவரி 2024 (07:03 IST)
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது 3 வயது பெண் குழந்தை கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் குற்றவாளிகள் 11 பேர் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் பில்கிஸ் தரப்பில் மனுதாக்கல் செய்த நிலையில் இந்த மனுவின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்றும், பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும்  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை படமாக எடுங்கள் என ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் கங்கனாவை டேக் செய்திருந்தார். அவருக்கு பதிலளித்த கங்கனா “நான் அந்த கதையை எடுக்க விரும்புகிறேன். என்னிடம் அந்த கதையும் ரெடியாக உள்ளது. இதற்காக சில ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளேன். ஆனால் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் அரசியல் படங்களை எடுப்பதில்லை எனக்கு பதில் அனுப்பியுள்ளனர். நான் பாஜக ஆதரவாக இருப்பதால் என்னோடு இணைந்து படம் பண்ணமாட்டோம் என ஜியோ நிறுவனம் சொல்லிவிட்டது. ஜி நிறுவனமோ வேறு ஒரு நிறுவனத்தோடு இணைய உள்ளது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

தியேட்டரில் யூடியூபர்கள் பேட்டி எடுக்க தடையா? தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு..!

சென்னையில் ரஜினி & உபேந்திரா நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி… கூலி அப்டேட்!

மலையாள சினிமாவேக் காத்திருக்கும் ‘மெகாஸ்டார் 429’ படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்