சாவர்க்கரைப் போல என்னையும் சிறையில் தள்ளப் பார்க்கிறார்கள் – கங்கனா டிவீட்!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (12:49 IST)
நடிகை கங்கனாவுக்கு மகாராஷ்டிரா அரசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனைகள் நீடித்து வருகின்றன.

சுஷாந்த் மரணம் தொடர்பான கருத்துகள், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு சிவசேனாவுடன் மோதல் என பாலிவுட்டில் இப்போது கங்கனா மோதாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு எல்லோருடனும் சண்டை போட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி விதிகளை மீறி கங்கனாவின் அலுவலகம் கட்டப்படுவதாக மும்பை நகராட்சி கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்தது.

இந்நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மேலும் அவர் சகோதரி மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை விசாரித்த மும்பை பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் கங்கணா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள கங்கனா ‘நான் சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போன்றோர்களை நான் பின்பற்றுகிறேன் லட்சுமி பாயின் கோட்டை உடைக்கப் பட்டது போல என்னுடைய வீடும் உடைக்கப்பட்டது. சாவர்க்கரை சிறையில் தள்ளியது போல என்னையும் இவர்கள் சிறையில் தள்ள முயற்சி செய்து வருகின்றனர்.’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

தொடர் சர்ச்சையாகும் பேச்சு.. தேவயானியின் கணவருக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments