Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிப்ப முடிச்சதும் ராணுவ பயிற்சிய கட்டாயமாக்கனும்… கங்கனா ரணாவத் கருத்து!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (14:13 IST)
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. முன்னணி ஒளிப்பதிவாளர் கங்கனாவின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற மாட்டேன் என வெளிப்படையாகவே அறிவித்தார்.

தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைப் பேசிவரும் கங்கனா இப்போது இந்தியாவில் படிப்பு முடிந்ததும் அனைவருக்கும் ராணுவ பயிற்சியை கட்டாயமாக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். மேலும் “அவ்வாறு செய்தால் ராணுவத்தில் இருக்கும் சோம்பேறிகளையும், பொறுப்பற்றவர்களையும் அப்போதுதான் ஒழிக்க முடியும். இதன் மூலம் அவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

கங்கனா கதாநாயகியாக நடிக்கும் தேஜஸ் திரைப்படம் ராணுவப் பின்னணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காகதான் அவர் இவ்வாறு பேசியுள்ளதாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments