Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர்கான் விவாகரத்தில் கருத்து தெரிவித்த கங்கனா!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (10:15 IST)
நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை சில தினங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

தற்போது அமீர்கான் விவாகரத்து சம்மந்தமாக சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘இந்துப் பெண்ணான கிரண் ராவ் இஸ்லாமியரான அமீர்கானை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் இரண்டு குழந்தைகளும் இஸ்லாமியர்களாகவே வளர்க்கப்பட்டனர். ஏன் ஒரு குழந்தை இந்துவாக வளர்க்கப்படவில்லை. இஸ்லாமியர்களை திருமணம் செய்துகொள்ளும் இந்து பெண்கள் ஏன் இந்துவாகவே தொடரமுடியவில்லை’ எனக் கேள்வி எழுப்பும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments