Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் முகாமிட்ட லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படக்குழு!

vinoth
புதன், 5 மார்ச் 2025 (15:10 IST)
தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார்.

இதையடுத்து அவர் காஞ்சனா 4 படத்தை பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இந்த படம் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இடையில் பிற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ். சமீபத்தில் பொள்ளாச்சியில் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்றது.

முதலில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் அவர்களுக்கும் ராகவா லாரன்ஸுக்கும் இடையே பட்ஜெட் சம்மந்தமாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் மனிஷ் இந்த படத்தைத் தயாரிக்கிறார். தற்போது விறுவிறுப்பாக மும்பையில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் லாரன்ஸ். அங்கே அவரும் பூஜா ஹெக்டேவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவாஜி வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய மனு தாக்கல்.. உயர்நீதிமன்றம் அனுமதி...!

’டிராகன்’ இயக்குனரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யா 45 படத்தின் அடுத்த அப்டேட்டைக் கொடுத்த ஆர் ஜே பாலாஜி!

ரசிகர்களின் கதறலுக்கு செவி கொடுத்தாரா AK?... அடுத்த படம் சிறுத்தை சிவாவுடன் இல்லையாம்!

அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா தனுஷ்?... திடீரென பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments