Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சனா 4 வேலைகளைத் தொடங்கிய ராகவா லாரன்ஸ்… இவர்தான் ஹீரோயினா?

vinoth
வெள்ளி, 15 நவம்பர் 2024 (11:32 IST)
தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார்.

இதையடுத்து அவர் காஞ்சனா 4 படத்தை பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இந்த படம் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இடையில் பிற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ்.

இந்நிலையில் இப்போது அவர் காஞ்சனா 3 படத்தைத் தூசு தட்ட ஆரம்பித்துள்ளார். திரைக்கதை செப்பனிடும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments