Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகளின் பங்கு உள்ளது – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கங்கனா!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (16:10 IST)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளான் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரபலமான பானு என்ற மூதாட்டிக்கு  ரூ. 100 கொடுத்து இப்போராட்டத்திற்கு வரவழைத்துள்ளனர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார் கங்கனா. இதனால் அவருக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது கங்கனா விளக்கம் அளிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘கடந்த சில நாட்களாக உணர்வு மற்றும் பாலியல் ரீதியான மிரட்டல்களுக்கு ஆளாகியுள்ளேன். விவசாயப் போராட்டம் அரசியல் கட்சிகளால் தூண்டி விடப்பட்டுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. அதில் தீவிரவாதிகளின் பங்கும் உள்ளது. நான் என் வாழ்க்கையின் இளமை பருவம் முழுவதும் பஞ்சாப்பில் கழித்தவள். அங்குள்ள பெரும்பாலான மக்கள் காலிஸ்தானை விரும்பவில்லை. அவர்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள். தீவிரவாதிகளுக்கும், அந்நிய நாட்டு சக்திகளுக்கும் முன்னால் நாம் பலவீனமானவர்களாகி விட்டோமா?. தினமும் என் பேச்சுகளுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டுமா? ‘எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அருண் விஜய்யின் 36வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. ’தல’ டைட்டில் வச்சிருக்காரே..!

நடிகர் சங்க கட்டிட பணிகள்: சிவகார்த்திகேயன் கொடுத்த மிகப்பெரிய நிதியுதவி!

*#ம்மால தெறிக்க விடுறோம்.. ஏகப்பட்ட சென்சார் இருக்கும் போல! – வெளியானது Deadpool & Wolverine தமிழ் ட்ரெய்லர்!

நடிகை ஸ்ருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

அடுத்த கட்டுரையில்