Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுடியூபில் புதிய சாதனையை படைத்த சிவகார்த்திகேயன் பட பாடல்! தமிழ் சினிமாவிலேயே இதுதான் முதல் முறை!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (15:23 IST)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த கனா திரைப்படத்தின் இருபாடல்கள் யுடியூபில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கிய கனா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியானது. தமிழின் முதல் பெண்கள் கிரிக்கெட்டை மையப் படமாக உருவான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் கனா படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் முனுமுனுக்கும் அளவுக்கு ஹிட்டாகின.

குறிப்பாக ’வாயாடி பெத்த புள்ள’ மற்றும் ’ஒத்தையடி பாதையிலே’ ஆகிய இரு பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் அந்த இரண்டு பாடல்களும் யு டியூபில் தலா 10 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரே படத்தைச் சேர்ந்த இரு பாடல்கள் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் ‘எம் குமரன்S/O மகாலட்சுமி’ பட ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் – ஜோதிகா தடாலடி கருத்து!

‘சாமி, உங்களால் இந்தியாவுக்கே பெருமை’… இளையராஜாவுக்கு ரஜினிகாந்தின் வாழ்த்து!

சிம்பு நடிக்க இருந்த படத்தில் இப்போது சிவகார்த்திகேயன்..!

சச்சின் திரைப்படம் ரி ரிலீஸில் படைக்கப் போகும் சாதனை…!

அடுத்த கட்டுரையில்
Show comments