என் வாத்யார் கே.பி-ய நினைவுகூர்கிறேன்! – இயக்குனர் பாலசந்தர் பிறந்தநாளில் கமல்ஹாசன் பதிவு!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (11:51 IST)
தமிழ் சினிமா இயக்குனரான காலம் சென்ற கே.பாலசந்தரின் பிறந்தநாளான இன்று நடிகர் கமல்ஹாசன் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த இயக்குனராகவும், தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்படும் இயக்குனர் கே.பாலசந்தரின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் கமல் – ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு முத்திரை படங்களை அளித்த பாலசந்தரின் பிறந்தநாளில் பலரும் அவரை நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் “சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்யார் கேபி. என்னுடைய 16-வது வயதில் அவருடனான அறிமுகம் ஏற்பட்டது. எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு. அமரர் கே.பாலச்சந்தர் அவர்களை அவரது 91-வது பிறந்தாளில் நினைவுகூர்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments