Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது தெரியுமா?

Webdunia
வியாழன், 4 மே 2017 (17:27 IST)
வடமாநிலங்களில் சின்னத்திரையில் புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தமிழில் நடத்துவது உறுதியாகியுள்ளது.


 

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடரில், முக்கிய 15 பிரபலங்கள், ஒரே வீட்டில் 100 நாட்கள், தொலைத் தொடர்பு, வெளியுலக தொடர்பு எதுவுமின்றி ஒன்றாக சேர்ந்து வசிப்பார்கள். இந்த நிகழ்ச்சி மும்பையில் மிகவும் பிரபலமான ஒன்று. பாலிவுட் கதாநாயகிகள் மற்றும் சிறு வேடங்களில் நடிக்கும் நடிகைகள் என பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.  தமிழில் இதை கமல்ஹாசன் நடத்துகிறார். 
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “ பிக்பாஸ் நிகழ்ச்சிகாக விஜய் டிவி என்னை தொடர்பு கொண்ட போது நான் சிரித்தேன். என் வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயம் முதல் அனைத்தும் மற்றவர்களால் கண்காணிக்கப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களை நான் கண்காணிக்கப் போகிறேன்” என அவர் கூறியுள்ளார்.
 
இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி தொடங்கவுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments