Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக் லைஃப் படத்தில் ரஹ்மான் இசையில் பாடல் எழுதும் கமல்ஹாசன்!

vinoth
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (10:15 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த தேதியில் தக்லைஃப் படக்குழுவினரால் அவர்களை வைத்து ஷூட்டிங் எடுக்க முடியாததால் அவர்கள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இப்போது வட இந்தியாவில் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் மணிரத்னம். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்துக்கான பாடல் ஒன்றை கமல்ஹாசன் எழுதியுள்ளாராம். இந்த பாடல் பதிவு விரைவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments