‘தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்.. பரிசோதனை அல்ல நடைமுறை’ – கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

vinoth
புதன், 21 மே 2025 (10:35 IST)
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் படம் திரையரங்குகளில் ரிலீஸாகி 8 வாரங்கள் கழித்துதான் ரிலீஸாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள கமல் “இது ஒரு பரிசோதனைக் கூட இல்லை. இதுதான் நடைமுறை. இந்த முடிவுக்கு ஒத்துக்கொண்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. இது சினிமாவுக்கு ஆரோக்யமான ஒன்றாக இருக்கும். அப்படி அமைந்தால் அதை முதலில் பயன்படுத்திக் கொண்டது நாங்களாக இருப்போம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜாய் க்ரிஸில்டா என்னை மிரட்டி திருமணம் செய்தார்! நான் எந்த ஒப்புதலும் தரலை! - மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை!

ஹோட்டல் டாஸ்க்கிலும் பஞ்சாயத்து! வேற வேலையே இல்லையா? - Biggboss season 9

பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்! நடிகர் துல்கர் சல்மானுக்கு சம்மன்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் ஏ ஆர் ரஹ்மான்… ‘பெட்டி’ முதல் சிங்கிள் அப்டேட்!

சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்.. சக நடிகர்களுக்கு விஷ்ணு விஷால் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments