இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆகிறதா ’இந்தியன்3’?… ரிலீஸ் தேதி பற்றி பரவும் தகவல்!

vinoth
புதன், 23 ஜூலை 2025 (10:28 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,  எதிர்பார்ப்புகளுக்கு மததியில் கடந்த ஆண்டு ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது. இதனால் அந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஷங்கர் மறுத்தார்.

இந்நிலையில் தற்போது இந்தியன் 3 படத்தைத் தொடங்குவது சம்மந்தமாக சுபாஷ்கரன் மற்றும் ஷங்கர் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவிலேயே மீதமிருக்கும் காட்சிகளை படமாக்கிவிட்டு இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments