தக் லைஃப் ஷூட்டிங் நிறைவு எப்போது… வெளியான தகவல்!

vinoth
புதன், 4 செப்டம்பர் 2024 (08:53 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.  தற்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதியோடு கமல்ஹாசனுக்கான காட்சிகள் நிறைவடைய உள்ளதாகவும், செப்டம்பர் மாத இறுதியில் மொத்த ஷூட்டிங்கும் முடியவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தக் லைஃப் ஷூட்டிங் முடிந்ததும் கமல்ஹாசனின் அமெரிக்கா சுற்றுப்பயணம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல சிக்கல்களைக் கடந்து ஒரு வழியாக க்ளைமேக்ஸுக்கு வந்த ‘தி ராஜாசாப்’ படப்பிடிப்பு!

ஜனநாயகன் தமிழக விநியோக உரிமை வியாபாரத்தில் எழுந்த சிக்கல்…!

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா லிங்குசாமி?

சுந்தர் சி க்கு ரஜினி பட வாய்ப்புக் கிடைக்க காரணமாக அமைந்த மூக்குத்தி அம்மன் 2!

ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு அப்பாவாக சிரஞ்சீவி? – இயக்குனர் சந்தீப் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments