Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக் லைஃப் படத்துக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா கமல்ஹாசன் & மணிரத்னம் ஜோடி?

vinoth
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (09:17 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. கடந்த வாரம் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்தது.

இந்நிலையில் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நடிகர் கமல்ஹாசன் படத்தில் முதல் தொகுக்கப்பட்ட பிரதியை சமீபத்தில் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் அவர் மகிழ்ச்சியடைந்தததை அடுத்து மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்ற முடிவில் உள்ளதாகவும். அதை மணிரத்னத்திடமே சொல்லியுள்ளதாகவும் தெரிகிறது. தக் லைஃப் படத்தின் ரிலீஸ் அடுத்த் ஆண்டு இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருண் விஜய்யின் ரெட்ட தல பட ஷூட்டிங் நிறைவு!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா கமல்ஹாசன் & மணிரத்னம் ஜோடி?

நடிகர் ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படம் உலகளவில் ரூ. 304 கோடி வசூல்!

நயன்தாரா & நயன்தாரா நடிக்கும்’டெஸ்ட்’ படம் ஓடிடியில் நேரடி ரிலீஸா?

மாற்றங்களே வினா… மாற்றங்களே விடை – ரசிகர்களின் சலிப்பைப் புரிந்துகொண்ட இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments